இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று (04) இடம்பெற்றது.
அதிதிகள் ரபான் அடித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து பள்ளிவாயல் முன்றலில் அதிதிகளினால் தேசியக்கொடி ஏற்றி தேசியக்கீதமும் இசைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுதந்திர தின நினைவாக அதிதிகளினால் பயன்தரும் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டது.
சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் பள்ளிவாயலின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசார நிகழ்வுகளைத் தொடர்ந்து அதிதிகளின் உரை இடம்பெற்றது. சுதந்திர தினத்தினை முன்னிட்டு கொரோனா நோயிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் வகையில் விசேட துஆ பிரார்த்தனையும் இதன்போது இடம்பெற்றது.
மௌலவி அப்துர் றஊப் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதிகளாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைன் அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர், காத்தான்குடி நகரசபையின் பிரதி தவிசாளர் ஜெசீம், கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், உலமாக்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: