News Just In

12/24/2021 05:02:00 PM

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி! Omicron அறிகுறி என தகவல்!


லண்டனில் இருந்து ஊர் திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் உச்ச நகைச்சுவை நடிகராக உள்ளவர் வடிவேலு. இவர் நடித்து வரும் புதிய திரைப்படமான நாய்சேகர் ரிட்டன்ஸ் தொடர்பான பணிக்காக லண்டனுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுவுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைசெய்யப்பட்டது.இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் லேசான அறிகுறிகளுடன் வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறியாக கருதப்படும் S ஜீன் டிராப் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

No comments: