News Just In

12/20/2021 06:34:00 AM

படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிப்பு!

சோளன் செய்கையில் தற்போது படைப்புழுவின் தாக்கம் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் புடைப்புழுத் தாக்கம் தொடர்பிலும், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும், விவசாயிகளுக்கு விழக்கமளிக்கும் விழிப்புணர்வு நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டம் தாந்தாமலை, மக்களடியூற்று, மற்றும் பனிச்சையடிமுன்மாரி, ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை(19.12.2021) நடைபெற்றது.

மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ரி.மேகராசா, தாந்தாமலை விவசாயப் போதனாசிரியார், ரி.சுரேஸ், பாடவிதான உத்தியோகஸ்த்தர் என்.லக்ஸமன், தொழில்நுட்ப பாடவிதான உத்தியோகஸ்த்தர், மற்றும் கமநல கேந்திர நிலைய உத்தியோகஸ்த்தர், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விளக்கங்களை வழங்கினர்.

தாந்தாமலை பகுதியில் சுமார் 150 இற்கு மேற்பட்ட ஏக்கரில் சோளன் செய்கை பண்ணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

.எச்.ஹுஸைன்

No comments: