News Just In

12/16/2021 07:43:00 PM

கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலத்தில் முப்பெரும் விழா

கல்முனை அஷ் -ஸுஹரா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா இன்று(16) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எச்.ஆர் மஜிதிய்யா தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் புவனேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் வை.ஹபிபுல்லாஹ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.அத்தோடு பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இம் மாபெரும் விழாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும்,வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் கணக்காளர் ஆகியோரை கெளரவிக்கும் நிகழ்வும் மற்றும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களை கெளரவித்து வழியனுப்பும் என்பனவும் இம் மும்பெரும் விழாவில் இடம்பெற்றது. என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

(சர்ஜுன் லாபீர்)






No comments: