News Just In

12/20/2021 12:19:00 PM

6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ


சீன சேதனப்பசளை விவகாரத்தில் 6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவை பகைத்துக்கொள்ள முடியாது. இது இரண்டு  அரசாங்கங்களுக்கு  இடையிலான செயற்பாடு என்பதால் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் இலாப நஷ்டத்தை  ஏற்க வேண்டியுள்ளது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

குருணாகலில் பதிவாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சீன உரக்கப்பல் விவகாரத்தில் பேச வேண்டியது பண விவகாரம் குறித்து அல்ல. இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தே அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. எனவேதான் அந்த நிறுவனத்திற்கான நிதி தொகையை வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்தது. நாடுகளுடன் பணியாற்றும் போது கவனமாக செயற்பட வேண்டும்.

இதில் தவறுகள் எதுவும் காணப்படுவதாக எனக்கு தெரியவில்லை. மாறாக எவரேனும் தவறு செய்தால், அந்த தவறை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முன் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படப் போகும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். உடன்பாடு ஏற்பட்ட பிறகு தவறு நடந்திருந்தால் பணத்தை செலுத்த வேண்டும்.

6.5 மில்லியன் டொலர்களுக்காக சீனாவுடன் கோபப்படுவதா அல்லது அமைதியான முறையில் பகைத்துக்கொள்ள முடியாது. இது இரண்டு  அரசாங்கங்களுக்கு  இடையிலான செயற்பாடு என்பதால் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் இலாப நஷ்டத்தை  ஏற்க வேண்டியுள்ளது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார் . 



No comments: