News Just In

11/04/2021 06:08:00 AM

இன்று தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! - VTN செய்திக் குழுமம்


மனசெல்லாம் மத்தாப்பாய்
மகிழ்வினில் மனம் பட்டாசாய்
இனிப்போடும் களிப்போடும்
இனம்சேர்ந்து கொண்டாடுவோம்
இல்லத்தில் அகலொளிர
இன்பத்தில் மனம் ஒளிரட்டும்
உள்ளத்தில் இருள் ஒழிந்து
எண்ணத்தில் அருள் விழிக்க
வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்....

சிதறும் பட்டாசுஒலி வாழ்வின்
சிரிப்பொலியாக மாறட்டும்
மிளிரும் மத்தாப்பு ஒளியும்
ஒளிரும் வாழ்வாய் இனிக்கட்டும்
தேனாய் இனிக்கும் இனிய
நட்புகள் நீங்கள் என்றென்றும்
வானாய் உயர்ந்து புகழுடன்
வாழ்வீர்  என வாழ்த்துகிறேன்
இன்றோடு துன்பங்கள் நீங்கி
என்றும் இன்பங்கள் மலரும்
தீபஒளியாக அமையட்டும் ....


உலகெங்கும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் VTN செய்திக் குழுமத்தின் சார்பாக இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

No comments: