News Just In

11/12/2021 06:41:00 AM

பாகிஸ்தானின் கனவை கலைத்த அவுஸ்திரேலியா!

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணிக்கு 177 ஓட்டங்களை வெற்றியிலக்காக  நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் 14 ஆம் திகதி நியயூஸிலாந்து அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

No comments: