News Just In

11/12/2021 06:58:00 PM

இம்தாத் விளையாட்டுக் கழகத்திற்கு நாபீர் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்திற்கு உட்பட்ட மஜீட்புர கிராமத்தின் இம்தாத் விளையாட்டுக் கழகத்தினருக்கு நாபீர் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மஜீட்புர கிராமத்தில் இடம் பெற்றது.

இம்தாத் விளையாட்டுக் கழக தலைவர் பைறுாஸ் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் நாபீர் பவுண்டேசன் ஸ்தாபகரும், சமூக சேவகருமான ஈ.சி.எம். நிறுவன பணிப்பாளர் உதுமான் கண்டு நாபீர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கடினபந்து விளையாட்டுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கழக விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்

No comments: