News Just In

11/03/2021 06:35:00 PM

இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ள அறிவிப்பு!

அரசாங்கத்திடம் சம்பளம் பெறும் நிறுவனம் என்ற வகையில், எந்த விதத்திலும் நாட்டை இருளில் ஆழ்த்தாமல் இருக்க வேண்டும் என்பதே மொத்த மின்சார சபை ஊழியர்களினதும் நோக்கமாகும் என சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். நிர்வாகத்திற்கு அறிவிக்காததால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோர் சேவைக்கு சமூகமளிக்காதவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமையில், நாளையும் நாளை மறுதினமும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால். நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படலாம் என கூறப்படுகின்றபோதிலும், அது பற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை. நிர்வாகத்திற்கு இது தொடர்பில் அறிவிக்காததால் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோர் சேவைக்கு சமூகமளிக்காதவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாளை தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்றாலும், ஒருபோதும் மின்துண்டிப்பு இடம்பெறாதென மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.மின்சார விநியோகத்திற்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்பட மாட்டாதென உறுதி அளிப்பதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டணி நேற்று உறுதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments: