News Just In

8/06/2021 02:08:00 PM

சாய்ந்தமருது பாடசாலைகளை பொறுப்பேற்ற புதிய அதிபர்கள்- ஒரே நாளில் சுழன்றது பல அதிபர்களின் கதிரைகள்...!!


(நூருல் ஹுதா உமர்)
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்டக்கல்வி பிரிவின் நான்கு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அதிபர்கள் பாடசாலையை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எச்.எம். பௌஸ் தலைமையில் சாய்ந்தமருது பாடசாலைகளில் நடைபெற்றது.

கமு /கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபராக கமு /கமு/ அல்- ஹிலால் வித்தியாலய அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுவந்த அதிபர் எம்.எஸ்.எம். பைஸால் கமு /கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸிடமிருந்து பாடசாலையை பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபராக அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் அப்பாடசாலையின் பிரதியதிபரிடமிருந்து பாடசாலையை பொறுப்பேற்றார்.

அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் கமு /கமு/ அல்- ஹிலால் வித்தியாலய பாடசாலை நிர்வாகத்தை பொறுப்பேற்றிருந்த அதிபர் யூ.எல். நஸார் அவர்கள் கமு /கமு/ அல்- ஹிலால் வித்தியாலய அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம். பைஸாலிடமிருந்து பாடசாலையை முழுமையாக இன்று பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து மருதமுனை அல்- மனார் தேசிய பாடசாலை பிரதியதிபராக கடமையாற்றி வந்த ஏ.எம். அன்ஸார் அவர்கள் கமு/ கமு/ ரியாளுள் ஜன்னா வித்தியாலய அதிபராக அப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன் அவர்களிடமிருந்து பாடசாலையை பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிகழ்வுகளில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எச்.எம். பௌஸ், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் ஏ.எம். றியாஸ், பொறியியலாளர் கமால் நிஷாத், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலைகளின் அபிவிருத்தி சபை முக்கியஸ்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதானிகள், கல்விமான்கள், ஆசிரியர்கள், பழைய மாணவ அமைப்புக்களின் பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.









No comments: