News Just In

8/04/2021 07:33:00 AM

திருகோணமலை- நடுவூற்றுக் குளத்தில் மீன் பிடி அறுவடையின் போது குழறுபடி...!!


திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நடுவூற்றுக் குளத்தில் (03) மீன்பிடி அறுவடை நடைபெற இருந்த தருவாயில்,மீனவர் சங்க உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

திருகோணமலை கிண்ணியா நடுவூற்று கிராமத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க பொதுமக்களுக்கு மீனவர் சங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது.

நடுவூற்று குள மீனவர் சங்கத்தினால் இவ்வருடத்தில் 4 மாதங்களுக்கு முன்னர் குளத்தில் விடப்பட்ட மீன்களை நேற்று(03) அறுவடை செய்யும் போதே முறுகல் நிலை தோன்றியது.

சங்கத்தினால் வளர்க்கப்பட்ட மீன்களை சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மீன்பிடிக்க முற்பட்ட போதே சங்கத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகள் நிலை ஏற்பட்டது.

முரண்பாடுகளில் ஈடுபட்ட மீனவர்கள் நடுவூற்று குள மீனவர் சங்கத்தில் அங்கத்தவர்களாக இல்லாமையினாலேயே குறித்த குளத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் திருகோணமலை மாவட்ட நீரியல் வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம்.எல்.எம். இம்தியாஸ், இரு தரப்பினர்க்குமிடையே பேசி சுமுகமான நிலையை ஏற்படுத்தியதன் பின்னர் சங்க அங்கத்தவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதன் போது கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார் வருகைதந்திருந்தனர்.




No comments: