News Just In

8/19/2021 06:07:00 PM

ஓட்டமாவடியில் இம்மாதம் கொவிட்டில் ஒருவர் மரணம் 90 பேருக்கு கொரோனா...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வியாழக்கிழமை 19ம் திகதி வரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வியாழக்கிழமை 19ம் திகதி வரை தொண்ணூறு (90) கொரோனா தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொவிட் தொற்று நோயைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள், அத்தோடு அனாவசியமாக வீடுகளை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்து கொள்ளுங்கள் என்று சுகாதார தரப்பினரும், பொலிஸாரும் ஒலிபெருக்கியில் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.

தற்போதைய சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எவ்வித ஒன்றுகூடலையும் நடத்த முடியாது என்பதால் மக்கள் ஒன்று கூடலினை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொலிஸார் அல்லது சுகாதாரத் துறையினருக்குத் தெரியாமல் இரகசியமாக ஒன்று கூடுவதையும், நிகழ்வுகளை நடத்துவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. அத்தோடு நீரோடைகள் மற்றும் வயல் பிரதேசங்களுக்கு குடும்பத்துடன் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: