News Just In

7/10/2021 07:56:00 PM

ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் பிரதமர்...!!


கதிர்காமம் எசல பெரஹர உற்சவம் ஆரம்பமாகும் இன்றைய தினம் (10) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

ருஹுணு மாகம் பத்துவே தலைமை சங்கநாயக்கர் கிரிவெஹர ரஜ மஹா விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கொபவக தம்மிந்த தேரர் மற்றும் ருஹுணு மாகம் பத்துவே பிரதான நீதிமன்ற சங்கநாயக்கர் கபுகம சரணதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமர் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நலன் வேண்டி ஆசீர்வாதித்தார்.

அதனை தொடர்ந்து பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தில் வழிபாடு செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகளை நடும் வீட்டுக்கு வீடு மரம் நடும் தேசிய வேலைத்திட்டத்தில் கதிர்காமத்திலிருந்து இணைந்து கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்கள் கதிர்காமம் புனித பூமியில் இரு தென்னை கன்றுகளை நாட்டிவைத்தார்.

அதனை தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட பிரதமர், கதிர்காமம் புனித நகரின் நுழைவாயில், வாகன தரிப்பிடம் மற்றும் சாலை அமைப்பை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.


குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பிரதமரின் பங்கேற்புடன் கதிர்காமம் புனித பூமியில் நடைபெற்ற சமய வழிபாடுகளில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தின் பஸ்னாயக நிலமே டிஷான் விக்ரமரத்ன குணசேகர, கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக அமில் ரங்கன உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர்.








No comments: