News Just In

7/07/2021 07:04:00 PM

செம்மண்ணோடையில் வீடுவீடாகச் சென்று நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பிரதேசம் முழுவதற்கும் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (7) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த பிரதேச மக்கள் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பிரதேச மக்களுக்கு இவ் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

செம்மண்ணோடை பள்ளிவாசல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் ஒன்றியம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன.

குறித்த நிவாரணப் பணி ஏழைகள், பணக்காரர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவதாக ஒன்றியத்தின் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி தெரிவித்தார்.

ஒன்றியத்தின் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஒன்றியத்தின் ஆலோசகரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.ரிஸ்வி மஜீதி, கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினர், பிரதேச இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.








No comments: