News Just In

7/17/2021 06:25:00 PM

மட்டக்களப்பு- செங்கலடி ரமேஸ்புரத்தில் 40.4 மில்லியன் செலவில் வீதி மற்றும் வடிகான்கள் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்...!!


(செங்கலடி நிருபர் சுபா)
மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் வீதி மற்றும் வடிகாணிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் 40.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி மற்றும் வடிகாண் வேலைகள் சுபீட்சத்தின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் ஜனாதிபதியின் தொணிப்பொருளுக்கமைய ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மற்றுமொறு கட்டம் இன்று ரமேஸ்புரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைசர் சதாசிவம் வியாழேந்திரன், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச தவிசாளர் சி.சர்வானந்தன், செங்கலடி பிரதே சபை செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் தமிழர் முற்போக்கு கழக உறுப்பினர்கள் பொது மக்களென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைசர் எஸ்.வியாழேந்திரன்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் பால் நாட்டைக்கட்டியெழுப்புவோம் எனும் தொணிப்பொருளின்கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது. எதிர்க்கட்சியினரால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்;பட்டாலும் விமர்சணங்களையும் விசமத்தனங்களையும் கடந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டும் நாட்டுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கம் முனைப்பாகச் செயற்படுகின்றது. 2019 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

அதன் பின் தற்போது உலக நாடுகளையே கொரோனா வைரஸ் தாக்கம். இந்த சூழலிலே பொருளாதார ரீதியாகவும் மக்களின் வாழ்க்கை முறைமையை கட்டியமைக்கவேண்டும் என்பது அரசின் பொறுப்பாக இருந்துவருகின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பல வாக்குறுதிகளை வழங்கினார். நாமும் பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் பல வாக்குறுதிகளை வழங்கினோம்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மிகவும் சிரமத்துடன் செயற்படுகின்றோம். பேசுவது இலகுவான விடயம் அதற்கு செயற்பாட்டுவடிவம் கொடுப்படுது கஸ்டமாகவிடயம். பல விமர்சனங்கள் பிரசிணைகளை கடந்து மக்களின் பிரச்சிணைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அடுத்த அடுத்த கட்டங்களில் கிராமிய வீதிகள் கிராமிய பாளங்கள் செப்பணிடவேண்டியுள்ளது. ஒரு வருட காலத்தினுள் அரசாங்கம் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. குடிநீர் அற்றோருக்கு குடிநீர்த்pட்டத்திற்கான வேலைகள் நடைபெறுகின்றது. மட்க்களப்பு மாவட்டத்தில் ஒரு வருடகாலப்பகுதியில் 15தேசிய பாடசாலைகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.

உலக நாடுகளில் 50 நாடுகளுக்கு மேல் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்முடியாமல் உள்ளார்கள் தட்டுபாடு உள்ளது. எமது நாட்டிலே சீனா அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை அரசாங்கம் கொண்டுவந்துகொண்டிருக்கின்றது. இன்ம் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கவேண்டும்.

புன்னக்குடாவிலே 265 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலைக்கான கட்டுமாணப்பணிகள் நடைபெறுகின்றன. அந்தக்காணியைக்கூட பாதுகாக்க நாம் அந்த இடத்தில் போராடினோம். பல தனியார்கள் அந்த காணியைப்பிடித்தார்கள் காணி ஆணையாளர் விமல்ராஜ் அவர்களை சுட்டார்கள் அந்த காணியை பாதுக்காத்ததால் அங்கு தொழிற்சாலை அமைக்கப்படுகின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மிகக்கடுமையாக சண்டைபிடிப்பாரகள் ஆனால் தேர்தல் முடிந்ததும் தனது சமூகத்திற்காக ஒற்றுமையாக செயற்படுவர் இதை ஒரு சில தமிழ் அரசியல் வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.










No comments: