பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் மக்களோளோடு மக்களாய் மக்களுக்காக வாழ்ந்து சேவையாற்றிய திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. க.துரைரெட்ணசிங்கம் அவர்களின் இழப்பு எமது மக்களுக்கு பேரிழப்பாகும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் அவர்கள் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மூதூர் - கட்டைபறிச்சான் கிராமத்தில் பிறந்த கௌரவ. துரைரெட்ணசிங்கம் அவர்கள் அரசியலுக்கு வரும் முன்பே அதிபராகவும், கோட்டக்கல்வி அதிகாரியாகவும் கல்விப்புலத்திலே சிறந்த சேவையை வழங்கி சிறந்த சேவையாளனாகவும், சிறந்த அதிகாரியாகவும் விளங்கினார். இதனாலேயே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என பலர் விரும்பினார்கள். அந்தவகையில் அரசியல்வாதியாக தனது பயணத்தை தொடர்ந்த அன்னார் இனம், மதம், மொழி வேறுபாடு இன்றி அனைவருடனும் அன்பாகவும் எளிமையாகவும் பழகி தனது சேவையை வழங்கியிருந்தார்.
அத்துடன் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டு தடவைகள் பதவி வகித்ததோடு அக்காலப்பகுதியில் எமது நாட்டில் நிலவிய பல அசாசாரண சூழ்நிலைகளிலும் பல சவால்களை எதிர்கொண்டு மக்களோடு மக்களாய் வாழ்ந்து அரசியல் விடையத்திலும்சரி, அபிவிருத்தி விடையத்திலும்சரி மக்களுக்கான தன்னால் இயன்ற சேவையை வழங்கிய ஒரு சிறந்த மனிதர். அவருடைய இழப்பானது எமது மக்களுக்கு பேரிழப்பாகும். என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments: