கல்முனைக்கான மக்கள் செயற்பாட்டுச் சபை தலைவரும், கல்முனை கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத் தொகுதி முகாமைத்துவக் குழு தலைவருமான எம். ஏ. கலீலுர் ரஹுமான் அவர்களின் ஏற்பாட்டில், கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய உறவுகளின் நிதி உதவியில், அடையாளம் காணப்பட்ட சுமார் 40 குடும்பங்களுக்கான பெருநாள் உலர் உணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சுகாதார வழிமுறைகளைப் பேணி முகாமைத்துவக் குழுவினரால் கல்முனை மெரைன் ட்ரைவில் அமைத்திருக்கும் மக்கள் செயலக காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
"பகிர்ந்துண்டு மகிழ்வோம்" என்ற தொனிப்பொருளில் பிரபல சமூக செயற்பாட்டாளர் எம். ஏ. கலீலுர் ரஹுமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கான பெருநாள் உலர் உணவுப்பொதிகளை வழங்கிவைத்தனர். இவ்வமைப்புக்கள் கல்முனை பிராந்தியத்தின் அபிவிருத்தி தொடர்பிலான முன்னெடுப்புகள், போதையொழிப்பு மற்றும் வட்டியில்லா வங்கி முறைமையை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments: