News Just In

5/31/2021 08:23:00 AM

மட்டக்களப்பில் நேற்று 93 கொரோனா நோயாளர்கள் அடையாளம்- களுவாஞ்சிக்குடியில் மாத்திரம் 25பேர் அடையாளம்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 93பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தோரும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சீ.ஆர். பரிசோதனைகளின் பிரகாரம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில்,
மட்டக்களப்பு பிரதேசம்:- 06பேர்
களுவாஞ்சிக்குடி பிரதேசம்:- 25பேர்
வாழைச்சேனை பிரதேசம்:- 03பேர்
காத்தான்குடி பிரதேசம்:- 08பேர்
கோறளைப்பற்று மத்தி:- 04பேர்
செங்கலடி பிரதேசம்:- 08பேர்
ஏறாவூர் பிரதேசம்:- 02பேர்
பட்டிப்பளை பிரதேசம்:- 08பேர்
கிரான் பிரதேசம்:- 17பேர்
ஓட்டமாவடி பிரதேசம்:- 10பேர்
ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் 60 பேரும் பெண்கள் 33பேரும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக அண்மைக்காலங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் இருந்து வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, முகக்கவசங்களை முறையாக அணிந்து ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொது மக்களை அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: