News Just In

5/31/2021 08:48:00 PM

மட்டக்களப்பில் ஒரே நாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்களாக இன்று 145 பேர் அடையாளம்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று(31) திங்கள் கிழமை மாத்திரம் 145பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில்,
மட்டக்களப்பு பிரதேசம்:- 23பேர்
களுவாஞ்சிக்குடி பிரதேசம்:- 19பேர்
வாழைச்சேனை பிரதேசம்:- 08பேர்
காத்தான்குடி பிரதேசம்:- 02பேர்
கோறளைப்பற்று மத்தி:- 08பேர்
செங்கலடி பிரதேசம்:- 14பேர்
ஏறாவூர் பிரதேசம்:- 25பேர்
கிரான் பிரதேசம்:- 10பேர்
ஓட்டமாவடி பிரதேசம்:- 08பேர்
வெல்லாவெளி பிரதேசம்:- 17பேர்
ஆரையம்பதி பிரதேசம்:- 10 பேர்
ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக அண்மைக்காலங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் இருந்து வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, முகக்கவசங்களை முறையாக அணிந்து ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொது மக்களை அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: