News Just In

5/15/2021 12:10:00 PM

ஐந்து நாட்களில் 122 கொரோனா மரணங்கள்- இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா நிலவரம்...!!


இலங்கையில் 5 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 800ஐ கடந்து 801 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 122 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியதுடன், மரணங்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.

10ஆம் திகதி 26 மரணங்களும், 11ஆம் திகதி 23 மரணங்களும், 12ஆம் திகதி 18 மரணங்களும், 13ஆம் திகதி 24 மரணங்களும், நேற்றைய நாளில் 31 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 923 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, இலங்கையின் கொவிட்-19 மரணங்களின் சதவீதமானது, 0.67 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச கொவிட்-19 மரணங்களின் சதவீதம் 2.07 ஆக பதிவாகியுள்ளது. உலகளவில் பிரேஸிலில் கொவிட் மரணங்களின் சதவீதம் அதிகமாகும். 2.79 சதவீதமாக பிரேஸிலில் கொவிட் மரணங்கள் பதிவாகின்றன.

பிரான்ஸில் 1.84 சதவீதமாகவும், அமெரிக்காவில் 1.78 சதவீதமாகவும், இந்தியாவில் 1.09 சதவீதமாகவும் கொவிட்-19 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொவிட்-19 தரவுதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: