News Just In

4/08/2021 05:14:00 PM

ஒழுக்கமான கல்விதான் உயர்வைக் கொண்டு வரும்- மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சியாமினி!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஒழுக்கமான கல்விதான் உயர்வைக் கொண்டு வரும் பாடசாலையின் புகழ் கீர்த்தி நல்ல அபிமானம் இவ்வாறான பல பண்புகளை பாடசாலைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு மாணவர்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சியாமினி ரவிராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் வியாழக்கிழமை 08.04.2021 இடம்பெற்ற மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும்; நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

பாடசாலை அதிபர் எஸ்.டி. முரளிதரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சியாமினி

தலைவர்கள் என்போர் மாணவத் தலைவராக சமூகத் தலைவர்களாக சமயத் தலைவர்களாக அரசாளும் தலைவர்களாக இருந்தாலும் சிறந்த தலைவர்களுக்கும் அதற்கு நேர்மாறான தலைவர்களுக்கும் பல வரலாற்று உண்மைகள் இருக்கின்றன.

எனவே இன்றைய தினம் மாணவத் தலைவர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நீங்களும் சிறந்த தலைவர்களுக்கான முன்னுதாரணைமாகத் திகழ வேண்டும். அதன் மூலமாகவே உங்கள் பெற்றோருக்கும் இந்தப் பாடசாலைக்கும் நீங்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் முழு மனித குலத்திற்கும் நீங்கள் நன்மை செய்தவர்களாவீர்கள்.

வலயத்திலும் மாவட்டத்திலும் முழு நாட்டிலும் சிறந்த பாடசாலையாகவும் அந்தப் பாடசாலையின் மாணவர்களாகவும் நீங்கள் திகழ வேண்டும் என்பதே எனதும் இங்குள்ள அதிதிகளினதும் எதிர்பார்ப்பாகும்.

உயர் கல்வியிலும் தொழில் வாய்ப்பைப் பெறுவதிலும் மாணவத் தலைவர் என்கின்ற பதவிக்கு சிறந்த நன்மதிப்பும் புள்ளி வழங்கலும் உண்டு. எனவே இந்த நல்ல வாய்ப்பை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான ரீ. ராஜ்மோகன் எஸ். தில்லைநாதன் பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் ரீ. ஞானசேகரன் பிரதி அதிபர் துஷானி நவநீதன் உப அதிபர் என். இராஜதுரை‪உள்ளிட்டோரும் அயற்புற பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாடசாiலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

















No comments: