News Just In

4/25/2021 02:59:00 PM

புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் இரு வெளிநாட்டவர்கள் பலி...!!


கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 02 பகுதியில் தங்கியிருந்த 46 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியுமோனியா மற்றும் சுவாச பிரச்சினை என்பனவே குறித்த வெளிநாட்டவர் உயிரிழக்க காரணமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழுத்பு கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்க்பட்டிருந்த 63 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளார்.

சில உடல் உறுப்புக்கள் செயழிலந்தமை மற்றும் கொவிட் நியுமோனியா என்பனவே குறித்த வெளிநாட்டவர் உயிரிழக்க காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய நாளில் மாத்திரம் 895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 880பேர் சமூகத்தில் மற்றும் சுயதனிமைப்படுத்தலில் இருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் நேற்றைய நாளில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 218 பேருக்கு நேற்றைய நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குருணாகலை மாவட்டத்தில் 150 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 147 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 129 பேரும் றற்றைய நாளில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 585 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய நாளில் 5 ஆயிரத்து 159 பேருக்கு முன்னெடுக்க்பட்ட PCR பரிசோதனைகளிலேயே குறித்த 895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: