News Just In

4/12/2021 08:56:00 PM

வாழைச்சேனையில் எஸ்.எச். புர்ஹானுதீன் எழுதிய நூல் வெளீட்டு விழா!!


எஸ்.எம்.எம்.முர்ஷித் 
எஸ்.எச். புர்ஹானுதீன் எழுதிய“வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திக்கான எல்லை நிர்ணயம் மற்றும் புதிய கிராமசேவகர் பிரிவுகளை உறுவாக்குவதற்கான முன்மொழிவு” செய்யப்பட்ட புத்தக வெளீட்டு விழா நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

மௌலவி யூ.எல்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப் கலந்து கொண்டதுடன் நூல் விமர்சனத்தை கவிஞர் யூ.எல்.எம்.ஹரீஸ் நடாத்தியதுடன் நூலின் ஆய்வினை நூலாசியர் எஸ்.எச். புர்ஹானுதீன் நடாத்தியதுடன் நன்றி உரையினை ஹாபீஸ் என்.எம்.எம்.சியாம்நடாத்தினார்.

வாழைச்சேனை மெஸ்ரோ அமைப்பின் வெளியீடாக வெளியிடப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் பள்ளிவாசல் நிறுவாகிகள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











No comments: