News Just In

3/23/2021 08:44:00 AM

திருகோணமலை- மூதூரில் துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத பொது மக்கள் விசனம் தெரிவிப்பு!!


எப்.முபாரக்
மூதுார் பிரதேச சபைக்குட்பட்ட நடுத்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் முதலாவது பாலத்தில் நீர்ரோட்டம் தடைப்பட்டமையினால் பொது மக்கள் அதனை குப்பைத் தொட்டிகளாக பாவித்து வருகின்றனர்.

இதனால் அங்கு வீசப்பட்ட கழிவுகளிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இச்செயற்பாடானது தொடர்ந்தும் அதிகரிக்குமானால் நுளம்பு மற்றும் டெங்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு அதிலிருந்து வரும் துர்நாற்றத்தின் காரணமாக இவ்விடத்தில் குடியிப்பவர்கள் மட்டுமல்லாது போக்குவரத்து செய்யும் பாடசாலை மாணவர்கள் குழந்தைகளுக்கும் நோய் பரவக்கூடிய சூழ்நிலை அங்கு காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

துர்நாற்றம் காரணமாக வீதியில் செல்வோர் மூக்கினை பொத்திக்கொண்டு செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அப்பகுதி மக்கள் மூதூர் பிரதேச சபைக்கு அறிவித்தும் இது வரை எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயத்தில் மூதூர் பிரதேச சபையினர் மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.




No comments: