News Just In

3/30/2021 05:38:00 PM

இருவேறு சம்பவங்களில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் பலி!!


அயக மற்றும் மஹவெல ஆகிய பகுதிகளில் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்ட மோதல்களின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

அயகம பகுதியில் இருவருக்கிடையில் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக நபரொருவர் கூரிய ஆயுதத்தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமருகம பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அயகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொரணகொட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் , சந்தேக நபருக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் , சம்பவதினத்தன்று இருவருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் , இதன்போது சந்தேக நபர் உயிரிழந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைதுசெய்துள்ள அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செலகமவத்த பகுதியில் திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் இருவருக்கிடையில் ஏற்பட்டிருந்த தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

செலகமவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையளம் கண்டுள்ள பொலிஸார் கைது செய்வத்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: