News Just In

3/09/2021 11:28:00 AM

வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் விபத்தில் சிக்கி மரணம்!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் முறக்கொட்டான்சேனைப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் விபத்தில் சிக்கி மரணித்துவிட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளொன்றில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் மீது முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 07.03.2021 இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மாவடிவெம்பு கிராம வாசியான செல்லன் அருணாச்சலன் (வயது 60) என்பவரே மரணித்துள்ளார்.

விபத்;துக்குள்ளாகி படுகாயமடைந்த முதியவர் முன்னதாக அருகிலுள்ள சற்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.

சடலம் உடற்கூராய்வுப் பரிசொதனையின் பின்னர் திங்கட்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: