News Just In

3/09/2021 08:12:00 PM

ஆரையம்பதியில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் கருப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  (08) திங்கட்கிழமை பாலமுனை நடுவோடை கடற்கரை பகுதியில் சர்வதேசநேற்று மகளிர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இதன் போது பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், பெண்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன்,
மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக விளையாட்டு நிகழ்வுகளும் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








No comments: