News Just In

3/27/2021 05:46:00 PM

பசறை பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது!!


லுணுகலையில் இருந்து கொழும்பு வரை பயணித்த தனியார் பேருந்து பசறை 13 ஆம் கட்டை பகுதியில், கடந்த 20 ஆம் திகதி சுமார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 14 பேர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 95 ஆயிரம் ரூபாவும் மற்றும் காயமடைந்த 32 பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதமும் நிதியுதவி இன்று வழங்கப்பட்டுள்ளது.

லுணுகலை பல்நோக்கு கட்டிடத்தில் வைத்து குறித்த நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் அலுவலத்தினால் 30 ஆயிரம் ரூபாவும், போக்குவரத்து ஆணைக்குழுவினால் 25 ஆயிரம் ரூபாவும், குத்தகை நிறுவனத்தினால் 25 ஆயிரம் ரூபாவும் மற்றும் ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் 15 ஆயிரம் ரூபாவும் உயிரிழந்தவர்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு போக்குவரத்து ஆணைக்குழுவினரால் குறித்த 15 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

No comments: