News Just In

3/30/2021 05:24:00 PM

கிழக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேருக்கு கொரோனா- மொத்த எண்ணிக்கை 3434ஆக அதிகரிப்பு- கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்!!


கடந்த 24 மணித்தியாலயத்தில் கிழக்கு மாகாணத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று, பிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து கிழக்கில் மொத்த கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 3,434 அதிகரித்துள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக 23 பேர் இதுவரை கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

பேலியகொடை மீன்சந்தை கொத்தனியை அடுத்து இன்று (30) காலை 8 மணி வரையிலான 24 மணித்தியாலயத்தில் பிசிஆர் பரிசோதனை மூலம் கிழக்கில் தம்பலகாமத்தில் ஒருவரும், நிந்தவூரில் ஒருவரும், செங்கலடியில் ஒருவரும், ஏறாவூரில் இரண்டு பேரும், காத்தான்குடியில் இரண்டு பேரும், கோறளைப்பற்று மத்தியில் ஒருவரும், உகணனையில் நான்கு பேரும், தமணனையில் ஒருவர் உட்டபட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அ. லதாகரன் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 733 பேரும், மட்டக்களப்பில் சுகாதார பிராந்தியத்தில் 909 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 321 பேரும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 1,471 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 3,434 பேராக கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 8,136 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 17,122 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 19,954 பேருக்கும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 27,871 பேருர் உட்பட 73,083 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 253 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை அம்பாறை, காத்தான்குடி, திருகோணமலை, உப்புவெளி, ஏறாவூர், உப்புவெளி, கிண்ணியா, உகண ஆகிய பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதுடன் பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: