மட்டக்களப்பில் இலங்கைஅரச (பொது)வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளையொன்று வர்த்தக அமைச்சர் பந்துள்ள குணவர்தனவினால் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட வர்தக அமைச்சர் பந்துள்ள குணவர்த்தன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன், அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் யோஹா பெரேரா, பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) மகேஸ் மென்டிஸ், உதவி பொது முகாமையார் சாமர, முகாமையாளர் கயான் ரத்நாயக,கிளைமுகாமையார் எம்.எம். ஹக்கீம், மாவட்டதகவல் அதிகாரி. வீ. ஜீவாநன்தன், மட்டக்களப்பு கிளை முகாமையாளர் எம்.எம். ஹக்கீம் உட்பட கிளை உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
வர்த்தக அமைச்சின்கீழ் இயங்கும் முற்றிலும் அரசுக்குச் சொந்தமான இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனம் 1970 ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இக்கூட்டுத்தாபனத்தினூடாக தற்பொழுது அலுவலக எழுதுபொருள் மற்றும் உபகரணங்கள், கட்டுமானம் மற்றும் வன்பொருள், அலுவலக தளபாடங்கள் மற்றும் உள்துறை வடிவமைப்புகள், வீட்டு மற்றும் பொழுது போக்கு பொருட்கள், விளையாட்டு பொருட்கள், தகவல் தொழிநுட்ப தயாரிப்புகள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புக்களும், சேவைகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.












No comments: