சாரணிய இயக்கத்தின் தந்தையாக கருதப்படும் பேடன் பவல் அவர்களின் பிறந்த தினம் பெப்ரவரி 22 ஆந் திகதி உலகளாவிய ரீதியில் அனுட்டிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட பேடன் பவல் தின நிகழ்வானது மாவட்ட சாரணியர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு நீரூற்றுப்பூங்காவில் காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ் விசேட நிகழ்வில் தாய்ப்பூமியை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைய மர நடுகையும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆந் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். இவரால் 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவர் 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார். இளைஞர்களுக்கான சாரணியம் என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான ‘எயிட்ஸ் டு ஸ்கவுட்டிங்’ வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைஞர்களையும்; ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதையும் அவதானித்தார். 1907 ஆம் ஆண்டு சாரணியத்தினை ஓர் பரிசோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கினார். முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம் முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணிய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.

No comments: