கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டடருந்து.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படாத நிலையிலேயே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒருமுறை மாத்திரம் உறவினர்களுக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கைதிகளை பார்வையிடுவத்கு வருகைதருபவர்கள் உடைகளை மாத்திரமே கொண்டுவருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய உணவு மற்றும் பிற பொருட்களை சிறைச்சாலை சிற்றுண்டிச்சாலையின் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக கைதிகளை பார்வையிடுவதற்கு தடை விதிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்கள்ம் குறிப்பிட்டுள்ளது.
No comments: