News Just In

2/21/2021 03:00:00 PM

மட்டக்களப்பு சின்னப் புல்லுமலை கிராமத்தில் உள்ளங்கையில் அரவம் தீண்டியதால் சிசு மரணம்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு – பதுளைவீதியை அண்டிய சின்னப் புல்லுமலை கிராமத்தில் அரவம் தீண்டியதால் சுமார் 2 மாதங்களேயான ஆண் சிசு மரணித்து விட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் திருமணமான தம்பதியினருக்கு இக்குழந்தை முதல் பிரசவம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

வழமைபோன்று தாய்ப்பாலருந்திய நிலையில் கணணுறங்கிய குழந்தையை அதிகாலையில் தாய் அணைத்தபோது அக்குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது.

உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்ப்பித்தபோது குழந்தை ஏற்கெனவே மரணித்து விட்டிருந்ததாக வைத்தியசாயைலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் உள்ளங்கையில் அரவம் தீண்டியிருப்பது உடற்கூராய்வுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை 19.02.2021 அரவம் தீண்டியதால் மரணித்த விகாஸ் தேனுகாஸ் எனும் சிசுவின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: