இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு பெண்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பெண்ணையும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




No comments: