இந்தக் கூட்டம் முதற்தடவையாக ஒன்லைன் முறையில் நடத்தப்படும். களனி கங்கை நீர் மாசவடைவது பற்றிப் பேசுவதற்காக அதிகாரிகளை இணையத்தின் ஊடாக தொடர்புபடுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடி காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய நேரடி வருகைகளைக் குறைத்து, குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கில் ஒன்லைன் முறைமை பயன்படுத்தப்படுகிறது.

No comments: