News Just In

11/26/2020 06:39:00 AM

கொரோனா தொற்றால் மேலும் இருவர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 96ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் எனவும் மற்றையவர் பன்னிப்பிட்டிய பகுதியை்ச சேர்ந்த 80 வயதுடைய ஆண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96ஆக அதிகரித்துள்ளது.

No comments: