News Just In

11/23/2020 09:27:00 AM

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!!


கொவிட்-19 பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாது வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 303 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி குவைத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -230 என்ற விமானத்தில் 283 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் கட்டார், தோஹாவிலிருந்து 18 இலங்கையர்கள் கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அத்துடன் ஜப்பான் நரிட்டோவிலிருந்து இருவர் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -455 என்ற விமானத்தில் அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

No comments: