News Just In

9/05/2020 11:46:00 AM

43 பணியாளர்கள் மற்றும் 6 ஆயிரம் பசுக்களுடன் மூழ்கிய கப்பல்- அதிர்ச்சிசம்பவம்!!


43 பணியாளர்கள் மற்றும் 6 ஆயிரம் பசுக்களுடன் பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று ஜப்பான் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த புதன் கிழமை (2020.09.02) இடம்பெற்ற விபத்தில் சிக்கி காணாமல் போயிருந்த கப்பல் பணியாளர்களில் பிலிப்பைன்சை சேர்ந்த தலைமை அதிகாரியான 45 வயதுடைய நபர் புதன் கிழமை மீட்கப்பட்டிருந்தார்.

டுபாயில் செயல்பட்டு வரும் ‘கல்ஃப் நேவிகேஷன்’ என்ற நிறுவனத்தின் கால்நடை சரக்குக் கப்பல், சுமார் 6 ஆயிரம் பசுக்களை ஏற்றிக் கொண்டு நியூஸிலாந்திலிருந்து சீனாவின் டாங்ஷான் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

43 பணியாளா்களுடன் ஜப்பான் கடல் பகுதி வழியாக அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இயந்திரக் கோளாறு மற்றும் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கி அந்தக் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது குறித்து, தப்பிய தலைமை அதிகாரி தெரிவிக்கும் போது, படகின் இயந்திரங்களில் ஒன்று செயலிழந்துவிட்டதாகவும்,

இறுதியில் மூழ்குவதற்கு முன்பு ஒரு சக்திவாய்ந்த அலையால் கப்பல் கவிழ்ந்ததாகவும் அவர் கூறினார்.

கப்பலில் இருந்த 43 பணியாளா்களில் 39 போ் பிலிப்பின்ஸ் நாட்டையும்,

2 போ் நியூஸிலாந்தையும், அவுஸ்திரேலியாவைச் சோ்ந்த இருவரும் அந்தக் கப்பலில் இருந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் கடலோரக் காவல்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை இரு பணியாளர்களது உடல்கள் மற்றும் ஏராளம் பசுக்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் விபத்தில் சிக்கி உயிரிழந்த பசுக்களின் சடலங்கள் குறித்த கடற்பரப்பில் மிதந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: