
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் தனது கடமைகாளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத அனுஷ்டான நிகழ்வுகளைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளை இவ்வாறு பொறுப்பேற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான விரும்பு வாக்கை தனதாக்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
No comments: