
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வர்த்தகர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேர்வின் சில்வாவின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக பிரபல வர்த்தகர் ஒருவரிடம் பணம் கோரி தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாலக்க சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த வர்த்தகர் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், தலங்கம காவல்துறையினர் நேற்று (10) மாலக்க சில்வாவை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றிருந்த வேளை அவர் வீட்டில் இருக்கவில்லையென காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
No comments: