News Just In

8/31/2020 07:51:00 AM

நேற்று மாத்திரம் 17 பேருக்கு கொரோனா!- மொத்த எணிக்கை 3012 ஆக உயர்வு!



இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 17 பேருக்கு கொரோனா  தொற்றுறுதியானது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3012 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக தொற்றுறுதியான 12 பேரும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானது.

இது தவிர இந்திய கடலோடிகள் இரண்டு பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை தொற்றுறுதியான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர். இதற்கமைய கொரோனா தொற்றுறுதியான 2860 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்றுறுதியான 140 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: