News Just In

7/18/2020 04:09:00 PM

மட்டக்களப்பு பாடுமீன் அரிமாக் கழகத்தின் சேவை பணியேற்பு விழா

மட்டக்களப்பு பாடுமீன் அரிமாக் கழகத்தின் உடைய 15 ஆவது சேவை பணியேற்பு விழா நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் கஃபே சில்லி உணவகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா நிமால் ரணவக அவர்கள் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மாஸ்டர் ஆர்.சிவலிங்கம், அரிமா எம்.மனோகரன், அரிமா ஜீ.பாஸ்கரன் ஆகியோர் கலந்து சிறப்பைத்தனர்.

சேவை பணியேற்பு விழாவில் கௌரவ அதிதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விசேட அம்சமாக கதை சொல்லும் மட்டக்களப்பின் கலை பொக்கிஷம் மாஸ்டர் ஆர்.சிவலிங்கள் அவர்களுக்கு கவிதை பாமாலை பாடி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

பிரதான நிகழ்வாக மட்டக்களப்பு பாடுமீன் அரிமாக் கழகத்தின் புதிய தலைவராக அரிமா ஆர்.எம். றுஸ்வின் அவர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 

முன்னாள் தலைவர்களான அரிமா பீ.ஜீ.டேவிட், கலைச்செல்வன் ரமேஷ், ஜீ.மணிமாறன், பி.சடாச்சரராஜா, ஜீ.முரளிதரன் மற்றும் அரிமா கழகத்தில் சிறந்த சேவையை வழங்கிய உறுப்பினர்களுக்கும் கௌரவங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



























  

No comments: