News Just In

6/03/2020 03:50:00 PM

மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதிக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இரத்ததான முகாமொன்று புதன்கிழமை 03.06.2020 நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயலில் இப்பள்ளிவாயல் வழிகாட்டலில் இயங்கி வரும் ஸலாமா பௌண்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

ஜாமிஉஸ்ஸலாம் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் எம்.எச்.எம். சியாம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியகாலை பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி கணேசலிங்கம்  இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி ஹர்விசாந்த் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் ஸலாமா பௌண்டேசன் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.














No comments: