News Just In

5/01/2020 04:44:00 PM

VTN செய்தியில் வெளியான காணொளியை பார்வையிட்டு 9A சித்தி பெற்ற மட்டு மேற்கு வலய மாணவிக்கு மடிக்கணினி அன்பளிப்பு


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்ற கோணலிங்கம் லோவாஜினி தமது பாடசாலையில் முதலாவது 9A  சித்திகளை பெற்ற மாணவியாக வரலாறு படைத்துள்ளார்.

கல்விக்கு வறுமை ஒரு தடையில்லை என்பதுடன் தமது பிரதேசத்திலிருந்தும் கல்வியில் சாதிக்கலாம் என நிரூபித்துக்காட்டிய மாணவியின் காணொளி எமது VTN இணையத்தளத்தில் வெளியானது. இதனை பார்வையிட்ட கனடாவில் வதியும் பாலசுப்பிரமணியம் விமலநாதன் (கண்ணன்) அவர்கள் உடனடியாக விரைந்து எமது இணையத்தளத்தினை தொடர்புகொண்டு SAFE நிறுவனத்தின் ஊடாக மாணவிக்கு ஒரு மடிக்கணணியினை அன்பளிப்பு செய்துள்ளார்.

SAFE  நிறுவனத் தலைவரும் மாநகர முதல்வருமான தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த உதவி மாணவிக்கு வழங்கப்பட்டது.

நவீன கற்றலுக்கான வசதியினை மாணவிக்கு  ஏற்படுத்தி கொடுத்த பாலசுப்பிரமணியம் விமலநாதன் அவர்களுக்கு எமது செய்திக் குழுமத்தின் வாயிலாக நன்றியினை தெரிவிப்பதுடன் மாணவிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.







No comments: