News Just In

5/02/2020 09:27:00 AM

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களப்பு பகுதியில் கசிப்பு நிலையம் முற்றுகை!!

(படுவான் பாலகன்)
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் நேற்று (01) வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றுவளைப்பிலேயே குறித்த, கசிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, 5 வரல்களில் 1000 லீற்றர் கோடா மீட்கப்பட்டதுடன், உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் அடுப்பு போன்றனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களப்பு பகுதியில் அண்மைக் காலங்களாக கசிப்பு நிலையங்கள் பல முற்றுகையிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: