நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னரான மூன்று மாத காலத்தினுள் தேர்தலை நடத்தி மீண்டும் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
எனினும், நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்த சூழ்நிலையில் எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற எந்த வாய்ப்பும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையினை கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா? இல்லையா? என்பது தொடர்பாக ஜனாதிபதி, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனும் அறிவித்தல் தொடர்பான கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
குறிப்பாக தேர்தல் நடத்தப்படும் திகதி, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் திகதி என்பவற்றை அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினமான மார்ச் மாதம் 02ஆம் திகதியில் இருந்து அடுத்த மூன்றுமாத காலத்துக்குள், புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது உள்ளதாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி நாடாளுமன்ற தேர்தலை மே மாதத்தின் இறுதி வாரத்தில் நடத்த முடியாது எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4/04/2020 08:20:00 AM
தேர்தலை நடத்த முடியாது! மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக தீர்மானம்!?
Subscribe to:
Post Comments (Atom)

No comments: