அவர் மேலும் தெரிவிக்கையில்...
தொற்றுத் தடுப்புப் பிரிவின் கீழ் பீசீஆர் பரிசோதனை நடைபெறுவதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி அஞ்சா அருட்பிரகாசம், பேராதனைப் பல்கலைக்கழகம் போன்ற பலரினுடைய ஒத்துழைப்புடன் கிடைக்கப்பெற்ற உபகரணங்கள் மற்றும் வைத்தியசாலையில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி பீசீஆர் இயந்திரம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பரிசோதனை இடம்பெறுவது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்...
நோயாளரின் மூக்கிலும், தொண்டையிலுமிருந்து எடுக்கப்படும் திரவ மாதிரி 3 கட்டங்களாக விசேட பக்கற்றுகள் மூலம் பொதி செய்யப்பட்டு குளிர்ப் பெட்டியில் வைத்து ஆய்வுகூடத்திற்கு கொண்டு வரப்படும்.
கொண்டு வரப்படும் இம்மாதிரிகள் விசேட குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டு பரிசோதனைக்காக எடுக்கப்படும். பல படிமுறைகளாக மேற்கொள்ளப்படும் இப்பரிசோதனைக்கு சுமார் 6 தொடக்கம் 8 மணித்தியாலங்கள் இப்பரிசோதனைக்காக மருத்துவ ஆய்வகூட தொழிநுட்பவியலாளர்களுக்குத் தேவைப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலனி பிரதானியும், மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணருமான டாக்கடர் எஸ். மதனழகன், மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

No comments: