News Just In

4/26/2020 06:57:00 PM

மேலும் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 477ஆக உயர்வு!!


கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 477ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், இதுவரை 120 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதோடு 344 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: