News Just In

3/29/2020 01:22:00 PM

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான இரண்டாம் பகுதி நிவாரண உதவி


அண்மையில் ஏற்பட்ட கொரோனா நோய் பரவல் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளாகி வாழ்வாதார வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கான உதவியை கல்லடி ' குணம் நம்பிக்கை நிதியம் '' வழங்கி வருகின்றது.

முதலாம் கட்டமாக 27.03.2020 அன்று 750 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவியைத் தொடர்ந்து இன்று

• கல்லடி 230 பொதிகள் 2300 Kg

• நாவற்குடா 140 பொதிகள் 1400 Kg

• புன்னச்சோலை 30 பொதிகள் 300 Kg

ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 400 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினர்களும் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கமும் ( EDS ) மேற்கொண்டு வருகின்றது.

கல்லடி , நாவற்குடா , புன்னச்சோலை பகுதிக்கான பொதிகளை கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும் , மட்டக்களப்பு மாநகர முதல்வருமான கௌரவ தி.சரவணபவான் அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.



No comments: