News Just In

2/23/2020 12:21:00 PM

ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக இரா.தசோதரன் தெரிவு!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக இரா.தசோதரன் தெரிவுசெய்யப்பட்டார்.

நேற்று நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பின் அடிப்படையில் 270 வாக்குகளைப் பெற்று செங்கலடியைச் சேர்ந்த இரா.தசோதரன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இத் தேர்தல் வெற்றி தொடர்பாக நாம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள இரா.தசோதரன் அவர் கருத்து தெரிவிக்கையில்

நிச்சயமாக நான் இத் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கை இருந்ததாகவும் எமது பிரதேச இளைஞர்கள்ளின் ஆதரவுடன் அவர்களின் வேண்டுகேளுகிணங்கவே தாம் இந்த போட்டியில் களமிறங்கி வெற்றிபெற்றதாகவும் தெரிவித்த அவர்

தமக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி இளைஞர்களுக்கான சிறந்த சேவையை சிறப்பாக ஆற்றவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தன்னை வெற்றி பெறச் செய்த இளைஞர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.

No comments: